Monday, August 29, 2011

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிவித்துள்ளார்!

Monday, August 29, 2011
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அறிவித்துள்ளார். கச்சதீவு இலங்கையின் எல்லைப் பகுதிக்குள் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கடல் எல்லை குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென காலத்திற்கு காலம் தமிழக அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கச்சத்தீவில் வலைகளை உலர வைப்பதற்கும், புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை இருப்பதாக அமைச்சர் கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த தீவை அண்டிய பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment