Friday, August 19, 2011

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் திட்டமில்லை–சந்திரிக்கா!

Friday, August 19, 2011
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் திட்டம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார் என வெளியாகிய தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தக் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி மாறும் எண்ணம் எப்போதும் ஏற்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment