Wednesday, August 31, 2011

புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளின் தேர்தல்கள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன!

Wednesday,August,31,2011
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளின் தேர்தல்கள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு சுமனசிறி தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இந்த பிரதேச சபைகளின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளின் காரணமாக, தொடர்ந்தும் அந்த பிரதேச மக்கள் குடியேற்றப்படாமல் உள்ளனர்.

இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு தேர்தலை நடத்த முடியுமான என தேர்தல்கள் ஆணையாளர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் இருந்து அறிக்கை ஒன்றை கோரி இருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பிலும் ஆய்வு செய்யப்பட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment