Wednesday, August 31, 2011

ராஜிவ் சிலைகள் அவமதிப்பு அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்!

Wednesday,August,31,2011
சென்னை : சைதாப்பேட்டை சின்னமலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து சென்றுள்ளனர். வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலை மீதும் தார் பூசியுள்ளனர். இதனால், காங்கிரசார் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட சென்றனர். ஆனால் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். பின்னர் ராஜீவ் காந்தி சிலையில் இருந்த செருப்புகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காங்கிரசார், காமராஜர் அரங்கம் முன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காங்கிரசார் அருகில் இருந்த தடுப்புவேலிகளை நடுரோட்டில் அடுக்கி வைத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தினர். இதையடுத்து, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ராஜீவ் காந்தி சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கைது செய்வதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

No comments:

Post a Comment