Wednesday, August 31, 2011

தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம்:ஜெயலலிதாவுக்கு புலிகளின் செயற்பாட்டாளர்களும் ராஜீவ்காந்தி கொலையாளி தலைவர்களும் பாராட்டு!

Wednesday,August,31,2011
தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம்:ஜெயலலிதாவுக்கு புலிகளின் செயற்பாட்டாளர்களும் ராஜீவ்காந்தி கொலையாளி தலைவர்களும் பாராட்டு!

சென்னை : ராஜீவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்வர் ஜெயலலிதாவக்கு பல்வேறு தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். வைகோ(மதிமுக): சாவின் வாசலில் நின்ற வேளையில், தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்து, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.

எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஒளிச்சுடராக இத்தீர்மானம் உள்ளது. கோடானுகோடி தமிழ் மக்கள் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்ததும், வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முழக்கமிட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இப்படி ஒரு காட்சியை சென்னை உயர்நீதிமன்றம் இதுவரை சந்தித்ததில்லை. நிரபராதிகள் காப்பாற்றப்பட்டு விட்டனர்.

ராமதாஸ்(பாமக): தண்டனையை குறைக்க முடியாது என்று முதல்வர் அறிவித்த போதும், அவர் மனது வைத்தால் மூவரின் உயிரை காப்பாற்ற முடியும். இதற்காக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று நான் கூறியிருந்தேன். அதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து இந்த நடவடிக்கையை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அமைச்சரவையை கூட்டி இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றி, கவர்னரை நேரில் சந்தித்து தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த கேட்டுக் கொள்கிறேன்.

சரத்குமார்(சமக): மனிதாபிமானத்தோடு மூவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களின் நலனில் தனது அக்கறையையும், உண்மையான உணர்வையும் வெளிப்படுத்தி இருக்கும் இந்த சிறப்பு மிக்க தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவின் உன்னதமான எண்ணங்களை பிரதிபலிக்கின்றன.

பழ.நெடுமாறன்(3 தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம்): மூவரின் தூக்கு தண்டனையை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு முன்னோட்டமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பதை பாராட்டுகிறேன். தமிழர்களின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே இந்த விளைவுகளுக்கு காரணம். இதை உணர்ந்து மரண தண்டனையை அறவே ஒழிக்க ஒன்றுபட்டு போராட உறுதி எடுப்போம்.

No comments:

Post a Comment