Wednesday, August 31, 2011

ராஜீவ்காந்தியை கொலை செய்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றவேண்டும்-இளங்கோவன்!

Wednesday,August,31,2011
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தியை கொலை செய்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றவேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இந்த நிலையில் ஒரு சரியான நிலை எடுத்துள்ளார்.

அவரை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 பேருக்கும் தூக்குத்தண்டனை தரவேண்டும் என்று தெளிவாக சொல்லிவிட்டு இப்போது அதை மாற்றி சொல்வது என்பது சரியாக இருக்காது. இந்த விஷயத்தில் கருணாநிதி இரட்டை வேடம்போடுகிறார்.

இந்த 3 பேரையும் தூக்கில் போடாமல் தடுப்பீர்கள் என்றால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும். அமைதியாக இருக்கும் பல மக்கள் தனது உயிரை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே வன்முறைக்கும் தீவிரவாதத்திற்கும் முடிவு கட்டவேண்டும் என்று சொன்னால் தீவிரவாதிகளிடம் எந்த வித கருணையும் காட்டக்கூடாது.

சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

No comments:

Post a Comment