Monday, August 29, 2011
செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் முன்வைக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஆதரவாக இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் செயற்படக் காத்திருப்பதாக ஜே.வி.பி. எச்சரித்துள்ளது.
உள்நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையால் இலங்கை சர்வதேச தீர்ப்புகளுக்கு உட்படுத்தப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இலங்கை மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மனித உரிமைகள் போர் குற்றச்சாட்டுக்கள் முக்கியமானவை. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளும் அணுகுமுறைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிராக விரல்களை நீட்டி குற்றச்சாட்டுக்களை சுமத்தும்போது அதற்கு முறையாக இராஜதந்திர ரீதியில் பதிலடி கொடுக்காது உள்நாட்டில் மேடைகளில் வீர வசனங்களையே அரசாங்கம் பேசி வந்தது. அண்மைக் காலமாக இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்து வந்தன. இதனை பொருட்படுத்தாமல் அரசாங்கம் இருந்தமையால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பல நாடுகள் அழுத்தம் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவோ அமெரிக்காவோ எந்தவொரு சூழலிலும் இலங்கைக்கு உதவி செய்யாது. மாறாக அழுத்தங்களையும் பிரேரணைகளுக்கு ஆதரவையுமே வழங்கும்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற முற்பட்ட போது அதற்கு எதிரான நாடுகள் இன்று இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் நிலையே காணப்படுகின்றது. உலக நாடுகளுடன் நட்புறவை பாதுகாத்துக் கொள்ளாது அரசாங்கம் வீண் பகைகளையே தேடிக் கொண்டுள்ளது.
அவசர காலச் சட்ட நீக்கம் பயங்கரவாத தடைச் சட்ட நீடிப்பு என்பன மனித உரிமைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட சட்டங்களாகும். சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள், இடம்பெயர்ந்த மக்களின் யுவதிகள், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகள் உட்பட உள்நாட்டில் இடம்பெறும் ஊடக அடக்கு முறை என்பன இலங்கையின் சூழலை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சர்வதேசம் பல சந்தர்ப்பங்களை இலங்கைக்கு கொடுத்திருந்தது. மனித உரிமைகளை பாதுகாப்பது ஜனநாயக அரசின் கடமை என்றாலும் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவில்லை.
எவ்வாறாயினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு மேலும் அழுத்தங்களையும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள நேரிடும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் அமர்வு இலங்கைக்கு சாதகமாக அமையாது எனக் கூறினார்.

No comments:
Post a Comment