Monday, August 29, 2011
வளைகுடா நாடான பக்ரைனில் இருந்து கல்ப் ஏர் விமானம் கொச்சிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 137 பயணிகள் பயணம் செய்தனர். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.55 மணிக்கு விமானம் தரை இறங்கியது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் ஓடு தள பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது. விமானம் இறங்கியதும் தண்ணீரில் சறுக்கி ஓடு தளத்தை விட்டு விலகி ஓடியது.
இறுதியில் ஓடு தளத்துக்கு வெளியே சேற்றில் சிக்கி நின்றது. இதில் விமானத்தின் முன் பகுதியில் உள்ள சக்கரங்கள் உடைந்தது. விமானம் தாறுமாறாக ஓடியதை அறிந்து அதில் இருந்த பயணிகள் பீதிக் குள்ளானார்கள். விமானத் தின் அவசர வாசல் வழி யாக அவர்கள் வெளியேறினார்கள்.
சிலர் விமானத்தில் இருந்து குதித்து வெளியே வந்தனர். இந்த விபத்தில் 7 பயணிகள் காயம் அடைந்தனர். வேறு எந்த அசம்பாவிதமும் நடக் காததால் 130 பயணிகள் காயமின்றி தப்பினார்கள். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சையத் முகமது என்ற பய ணிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு உள்ளார். விமானம் தரை இறங்கிய போது பலத்த மழையும், காற்றும் வீசியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக கொச்சி விமான நிலைய ஓடு தள பாதை 10 மணி நேரம் மூடப்பட்டது. இதன் காரணமாக கொச்சி விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள், திருவனந்தபுரம், பெங்க ளூருக்கும் திருப்பி விடப்பட்டன.
சார்ஜா, குவைத், மஸ்கட் (மொத்தம் 4 விமானம்) ஆகிய இடங்களில் இருந்து கொச்சி வரவேண்டிய விமானங்கள் திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்டன. ஓமனில் இருந்து வரவேண்டிய விமா னம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதே போல கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய எமிரேட்ஸ், ஏர் அரேபியா, கத்தார் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment