Thursday, August 18, 2011
ராமநாதபுரம் : இலங்கை அகதிகளுக்கு, அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அகதிகள் இலங்கைக்கு செல்ல தயங்கி வருகின்றனர். அகதிகளுக்கு இலவசமாக, 20 கிலோ அரிசியும், மண்ணெண்ணெய், சீனி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள், அகதிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து அகதிகளுக்கு ரேஷனில் பருப்பு, உளுந்து போன்ற இதர பொருட்களும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆட்சியில் மாத ஊதியமாக வழங்கிய, 600 ரூபாய், 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத்துறை சார்பில் உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு அகதியாக அல்லாமல், மண்ணின் குடிமகனாக வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் இங்கே கிடைப்பதால், இலங்கைக்கு செல்ல அகதிகள் பலர் தயக்கம் காட்டுகின்றனர். ராமநாதபுரம் மண்டபம் முகாமில், 2,250 அகதிகள் உள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக, நேற்று மண்டபம் அகதிகள் முகாமில், ஊனமுற்றோர், விதவைகள் விவரம் சேகரிக்கப்பட்டது.
அகதி ஒருவர் கூறியதாவது: அகதியாகக் கருதப்பட்ட நாங்கள், தற்போது சுதந்திரமாக உள்ளோம். எங்கள் நாட்டுக்கு சென்றாலும், இத்தகைய வசதிகள் கிடைக்குமா என்பது சந்தேகமே. மண்டபம் முகாமில் உள்ள நாங்கள், எங்கள் உறவினர்களுக்கு இத்தகவலை தெரிவித்த உடன், அவர்களும் வருவதாக கூறியுள்ளனர். மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment