Monday, August 29, 2011
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடல் பகுதியில் நேற்று படகொன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் உயிருக்காகப் போராடிவருகின்றார்.
நேற்று மாலை வழமை போன்று தொழிலில் ஈடுபட்டுக்கொணடிருந்த வேளை திடிரென வீசிய புயல் காற்றினில் குறித்த படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியுள்ளது.
அவ்வேளையில் படகிலிருந்து கவிழ்ந்த இருவருமே மீன்களுக்கென விரிக்கப்படடிருந்த வலையினுள் சிக்குணடுள்ளனர்.
இன்று காலை வரை இவ்விரு மீனவர்களும் கரை திரும்பியிராதை அடுத்து சக மீனவர்கள் அப்பகுதியினில் தேடுதல் நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே மீனுக்கு வீசப்பட்டிருந்த வலையினுள் சிக்குண்டிருந்த நிலையில் இருவரும் மீட்கப்பட்டிருந்தனர்.
மண்டைதீவினை சொந்த இடமாக கொண்டவரான 21 வயதுடைய யாக்கோப்பு நிக்சன் வலையினில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மற்றையவரான 48 வயதுடைய அன்ரனி லியுட் ஆபத்தான நிலையில் மீட்கப்படடு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்pகப்பட்டுள்ளார்.
மண்டைதீவின் பெரும்பாலான கடந்பகுதிகளில் அண்மைக்காலமாகவே மீன் பிடிப்பதற்கான அனுமதி படைத்தரப்பினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment