Friday, August 19, 2011
புலிகளின் சர்வதேச வலையமைப்பை இலங்கையினால் மட்டும் இல்லாதொழிக்க முடியாது என பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளின் உதவியுடன் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் இலங்கையர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் விசேட பிரிவுகள் நிறுவப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர் இலங்கைச் சமூகத்திற்கும் உள்நாட்டு, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இலங்கை தொடர்பில் கூடுதலான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும், புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பு தற்போது ஓர் பிரச்சார வலையமைப்பாக மாற்றமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் சமூகத்துடன் இலங்கை அரசாங்கம் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ருத்ரகுமாரன் போன்றவர்கள் நாட்டுக்கு எதிராக போலியான பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1995களில் லெபானன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலிகள் 95 வீதமான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், 1997களில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் ஆயுதக் கொள்வனவை தடுத்து நிறுத்த அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் காத்திரமான உதவிகளை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment