Monday, August 29, 2011

சரத்பொன்சேகா விசேட அனுமதியுடன் மரணசடங்கில் பங்கேற்றார்!

Monday, August 29, 2011
தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தலைவர் சரத் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட அனுமதியுடன் நேற்று மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டார்.

சரத் பொன்சேகாவின் சகோதரர் ஒருவருடைய மகளின் மரண சடங்கிலேயே நேற்று பிற்பகல் 3.50 அளவில் அவர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி - வெதமுல்லயில் உள்ள மரண சடங்கு இடம்பெற்ற வீட்டிற்கு சிறைச்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சரத் பொன்சேகா அழைத்துச் செல்லப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ.டப்ளியூ.கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு சிறைச்சாலைகள் சட்டமூலத்திற்கு இணங்க, மரணித்த நெருங்கிய உறவினரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழக்கமாகும்.

எனினும். மரணித்த குறித்த பெண்மணி சரத்பொன்சேகாவின் சகோதரரின் மகள் என்பதன் காரணமாக விசேட அனுமதி பெறவேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம், கோரிக்கை விடுத்திருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த விடயம் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரே ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தலைவர் சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment