Thursday, August 18, 2011

கிறீஸ் மர்ம மனிதர்களுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது : பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்!

Thursday, August 18, 2011
இன்று நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் மீது பொய்யான கீர்த்திகளை ஏற்படுத்த சில சக்திகள் முன்னெடுக்கும் கிறீஸ் மர்ம மனிதர்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறும் விடயத்தை முழுமையாக மறுப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

எனவே, மக்கள் எவரும் சட்டத்தினை கையில் எடுக்க வேண்டாம் எனவும் அமைதி சமாதானம் காக்குமாறும் மக்களிடம் பிரதியமைச்சர் வேண்டிக் கொள்வதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். சஜி தெரிவித்தார்.

No comments:

Post a Comment