Monday, August 29, 2011

மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து விளக்கம் - சமரசிங்க!

Monday, August 29, 2011
யுத்தத்தின் பின்னர் இலங்கையின் எதிர்கால பயணப்பாதை மற்றும் அமைதியை தக்க வைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான தகவல்களை குறித்த அமர்வில் பங்கேற்கும் இலங்கை குழுவின் பிரதானி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை முகம்கொடுத்துள்ள சவால்கள் குறித்தும் மனிதவுரிமைகள் அமர்வில் கருத்து வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 12 ம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வில் பங்கேற்பதற்கான குழுவினர் எதிர்வரும் 8 ம் திகதி புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகிய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன ஆகியோர் குறித்த அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதேவேளை, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் மனிதவுரிமைகள் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செனல் போ தொலைக்காட்சிக்கு பதலளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட காணொளியையும், எதிர்வரும் 13 ம் திகதி ஜெனீவாவில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment