Friday, August 19, 2011

புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு முழுமையடைந்துவிட்டது என எண்ணுவது தவறு-கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, August 19, 2011
யுத்தம் முடிவடைந்து விட்டது, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காக நாட்டின் பாதுகாப்பு முழுமையடைந்துவிட்டது என எண்ணுவது தவறு என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து இலங்கை 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்திருக்கிறது. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இது அவசியம் தானா? இதற்காக அரசாங்கம் எவ்வளவு பணத்தை செலவு செய்துள்ளது? என செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு தெரிவித்தார். எத்தனை ஹெலிகொப்டர்கள் வாங்கப்பட்டது, எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்பது பற்றிய

விபரங்களை எனக்கு இப்போது உடனடியாக தெரிவிக்க முடியவில்லை. எனினும் யுத்தம் முடிவடைந்து விட்டது என்பதற்காக முழுமையான பாதுகாப்பில் இருக்கிறோம் என எண்ணிவிட முடியாது. இப்போது புதிதாக கரையோர பாதுகாப்பு பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காகவும் ஹெலிகொப்டர்கள் தேவைப்படும். கரையோரப் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. கடந்த காலங்களில் கடல் மார்க்கமாகவே புலிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் வந்தன. கரையோரத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. இவ்வாறான நடவடிக்கைகளுக்காகவே இவை தருவித்திருக்கலாம் என நான் எண்ணுகிறேன் என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

No comments:

Post a Comment