Thursday, August 18, 2011
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை மேலும் தொடர்ந்தால் கட்சி முற்றாக அழிந்துபோய்விடும். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் விருப்பத்தை அறிந்துகொண்டு தலைமைத்துவப் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
அந்த முன்னணி இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னணியின் தலைவர் வண.மீட்டியாகொட குணரட்ண தேரர் இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கு எதிராக எழுந்திருக்கும் போராட்டம் காரணமாக கட்சியின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது. மிக விரைவில் கட்சி அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்சிக்கான சிங்கள மக்களின் வாக்குகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதேபோல், சிறுபான்மை இன மக்களின் வாக்குகளும் குறைந்துகொண்டு போகின்றன. கட்சியில் உள்ள சிலர் பௌத்த பிக்குகளின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டனர்.
இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று கட்சியும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று யோசித்துப் பார்க்கவேண்டும். கட்சியைக் காப்பாற்றுவது பற்றிச் சிந்திக்கவேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க மக்களின் விருப்பம் என்னவென்று அறியவேண்டும். ரணில் மோசமான ஒருவர் என்று நாம் கூறவில்லை. ஆனால் கட்சியைப் பற்றிச் சிந்தித்து தலைமைத்துவத்தில் இருந்து விலகவேண்டும்.
இப்போது தேவை உண்மையான எதிர்க்கட்சியே தவிர அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் எதிர்க்கட்சியல்ல. கட்சி இந்த நிலைக்குச் செல்வதற்கு லிபரல்வாத கொள்கைதான் காரணம்.
ஆகவே, கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இதை உணர்ந்து கரு ஜயசூரிய கட்சியின் தலைவராக நியமிக்கப்படவேண்டும். ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment