Tuesday, January 16, 2018

தற்போதைய அரசாங்கத்துக்கு நிருவாத்திறனே இல்லை-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

பெண்களை மதுக்கடைகளுக்கு அனுப்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக, மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க திட்டம் தீட்டப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலி உடுகம விளையாட்டரங்கில்  நேற்று  பொதுஜன பெரமுன ஏற்பாடு செ
ய்திருந்த தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

பல வருட காலமாக பெண்களுக்கு இருந்துவரும் கௌரவத்தை தற்போது சீர்குழைக்க எண்ணியுள்ளனர். இரவு 10 மணி வரை மதுக்கடையில்  ஒரு பெண் வேலை செய்வாராயின் அவரது நிலை குறித்து நாம் சிந்திக்க முடியும்.
உள் நோக்கங்களை கருத்திற்கொண்டே இவர்கள் இத்தகைய வேலைத்திட்டங்களை செய்கின்றனர்.இந்த  அரசாங்கம் மக்களை மறந்து செயற்படுகிறது. ஜனாதிபதி கூறுகிறார் அரசாங்கம் குப்பை மேட்டை விட நாறுகிறது என்று. இதனை யாருக்கு கூறுகிறார்? நாங்களா அரசாங்கத்தை கொண்டு நடத்துகிறோம்? யாருடைய தவறு இது.

Friday, August 18, 2017

வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் : அ.வரதராஜப் பெருமாள்!

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன்
வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடமாகாண சபை மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண சபை உருவாக்கும் போது எமது மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். எனினும், இன்று வடமாகாண சபை மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இவ்வாறான வடக்குமாகாண சபை தேவைதானா? என்று மக்கள் எண்ண ஆரம்பித்துள்ளனர். தேர்தல் காலங்களில் ஒன்றுமையுடன் வாக்களியுங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்தவர்களே இன்று ஒற்றுமையின்றி இருக்கின்றனர்.

ஒரு பெரும் யுத்த அழிவுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட வடமாகாண சபை மக்களின் விடிவுக்காக உழைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

வடக்கு மக்களிடத்தில் மாத்திரமின்றி உலகம் முழுவதும் வாழும் மக்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், அந்த எதிர்பார்ப்பு வீணாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நன்மை செய்வோம் என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்கு நன்மை ஏதும் செய்யவில்லை. அத்துடன், தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றார்கள்.

வடமாகாண சபை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த சபையாக செயற்பட்டு வெளிவந்திருப்பது வெட்கக் கேடானது. முதலமைச்சர் தன்னுடைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்.
அமைச்சர்கள் ஏனைய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றார்கள். அவர்களுடைய கட்சியின் தலைமைக்கு எதிராக அவர்களே பிரச்சாரம் செய்கின்றார்கள்.

கட்சியின் தலைமை தன்னுடைய உறுப்பினர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றது. இவ்வாறானவர்கள் எவ்வாறு மக்களுக்கு சேவை செய்யப் போகின்றார்கள்? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Thursday, August 17, 2017

மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க, விசேட நீதிமன்றம் : ஜீ எல் பீரிஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க, விசேட நீதிமன்றம் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் நேற்று மே
ற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு எதிராக விசேட நீதிமன்றம் அமைத்து, வழக்கு தொடர்ந்து, தண்டனை வழங்கி, சிறையில் அடைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தயோசனை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து தாம் வேதனை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 87 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு கிடைத்திருப்பதாக பிரதமர் அண்மையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் விடயங்கள் குறித்து பிரதமர் எவ்வாறு அறிந்துள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தினால் தோல்வியான நிர்வாக முறைமை :


கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தினால் தோல்வியான நிர்வாக முறைமையே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thursday, June 29, 2017

டிரம்ப்-மோடி சந்திப்பின் போது,மெலனியா’வின் ஆடையின் விலை 139 180 இது தானுங்க!

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் முறையாக வெள்ளை மாளிகை சென்ற மோடியை, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா வரவேற்றனர்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நேற்று(27) அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்திக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்றார். அங்கு மோடிக்கு சிவப்பு கம்பளத்துடன், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்ப் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்து மோடியை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கேமிராவின் கவனத்தை டிரம்ப்பின் மனைவி மெலானியா பெற்றுக் கொண்டார்.

அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அந்த மஞ்சள் நிற மலர் உடையின் விலை 1,39 180 ரூபாயாகும். இதனை பிரபல ஆடை வடிவமைபாளர் எமிலியோ பூசி வடிவமைத்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பின் போது, இந்தியாவுக்கு டிரம்ப் குடும்பத்துடன் வருகை தர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்ற டிரம்ப், மகள் இவான்காதான் இந்தியா செல்ல மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக கூறினார்.
Image result for melania trump dress modi visit
Related image
Image result for melania trump dress modi visit
Image result for melania trump
Image result for melania trump
Image result for melania trump

Friday, June 2, 2017

மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் குண்டுப்புரளி – இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
விமானம் அவுஸ்திரேலியாவிலிருந்து பறந்த சிறிது நேரத்தில் வெடிகுண்டு பீதி காரணமாக மெல்போர்னில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
விமானத்தில் சென்ற இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.
 
சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான சேவகர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.