Wednesday, January 1, 2014

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் சிறப்புப் பேட்டி!

Wednesday, January 01, 2014
சென்னை::இலங்கைத் தமிழர் பிரச்சினைபற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகையைவிடவும் அதிகமாக எழுதியிருப்பது ‘தி இந்து’தான். அதிலும் 1983 இனப்படு கொலைக்குப் பின், தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளையும் தமிழர் போராட்டங்களையும்பற்றி விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறதது.
நானும் டி.எஸ். சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய அளவில் பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது ‘தி இந்து’ செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார். நான் கொழும்பு சென்று ஜெயவர்த்தனேவுடன் பேசினேன்; சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் குரல் எழுப்பினோம்; அவர் விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு.

புலிகளை ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம்; அவர்களுடைய நியாயங்களை எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள் முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத் தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும் புரிந்து விட்டன. உண்மையில், பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட்.
 
துப்பாக்கிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை. ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது எனக்குத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள், செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை… புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள். புலிகள் எதிர்ப்பு என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப் போக்காகும்?

இலங்கைப் பிரச்சினை மட்டும் அல்ல; காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்திருக்கிறோம். ஆனால், எது உண்மையில் சாத்தியமோ, எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.

புலிகள் எதிர்ப்புதான் தமிழீழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா?

இல்லை. தொடக்கம் முதலே ‘தி இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.

தமிழீழம் சாத்தியம் இல்லை; நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில்  மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்தது  என்ன சொல்கிறீர்கள்?

போர்களை ஆதரிப்பவன் அல்ல நான். முன்னரே சொன்னேன் – பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான்  புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க ராஜபக்‌ஷ தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம் மட்டும் பிரதானம் இல்லை; மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும் வேண்டும். அவைதான் தமிழர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும்: ரஷ்யா!

Wednesday, January 01, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள்  சபையில் இலங்கைக்கு எதிராக பல பிரேரணைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ரஷ்யா இதனைத் தெரிவித்துள்ளது.
 
எனினும் மேற்குலக நாடுகளின் ஆலோசனைகளை ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த 48 மணி நேரத்தில் மதுபோதையில் 2000 சாரதிகள் கைது!

Wednesday, January 01, 2014
இலங்கை::கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு வீதி விபத்துக்களில் சிக்கிய  575 பேர்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 சதவீத அதிகாரிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 217 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பண்டிகைக்காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒரு வாரத்தில் 2000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டு காவல் செய்தியில் உண்மை இல்லை: இராணுவத்தினரும் காவல்துறையினரும் நிராகரிப்பு!

Wednesday, January 01, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை இராணுவத்தினரும் காவல்துறையினரும் நிராகரித்துள்ளனர்.
இணையத்தளம் ஒன்று, நேற்று இரவு முதல் அவர், யாழ்;ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டது.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் ரூவான் வணிக சூரியவிடம் வினவியதற்கு, அவ்வாறான ஒரு தேவைப்பாடு தமக்கு இல்லை என்றும், இந்த செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இத தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவின் உயிர் அதிகாரிகளிடம் வினவியதற்கு, அவர்களும் இந்த செய்தியை மறுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ராதிகா சிற்சபேசன் கனடாவில் குடியமர்ந்த நிலையில், அங்கு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றார்.
இந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
ராதீகா சிற்சபேசன்  புலி ஆதரவு அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவவர் .

ஆளும் கட்சியின் சார்பில் அண்மையில் தீபக் ஒபராய் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், அதற்கு போட்டியாகவே எதிர்க்கட்சியின் சார்பில் புலி ஆதரவு ராதீகா சிற்சபேசன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜீ.எல். பீரிஸ் இம்­மாதம் 28ஆம் திக­தி­ய­ளவில் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­தியா செல்­ல­வுள்ளார்!

Wednesday, January 01, 2014
இலங்கை::வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் இம்­மாதம் 28ஆம் திக­தி­ய­ளவில் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு இந்­தியா செல்­ல­வுள்ளார். இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் மீனவர் விவ­காரம் சூடு பிடித்­துள்ள நிலை­யிலும் எதிர்­வரும் மார்ச் மாதம் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலை­யி­லுமே வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜயம் அமைந்­துள்­ளது.
 
இந்­திய விஜ­யத்­தின்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்­திய பிர­தமர் கலா­நிதி மன்­மோகன் சிங் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் ஆளும் கூட்­ட­ணியின் முக்­கி­யஸ்­தர்கள் எதிர்க்­கட்­சி­யான பார­திய ஜனதாக் கட்­சியின் முக்­கிய தலை­வர்கள் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.
 
இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்கை இந்­திய மீனவர் விவ­காரம் மற்றும் இலங்­கையின் அர­சியல் தீர்வு விடயம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் வேலைத்­திட்­டங்கள் குறித்து இந்­திய தரப்­புக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.
 
இந்­திய மீன­வர்கள் கைது விவ­காரம் தொடர்பில் தமி­ழ­கத்­தினால் இந்­திய மத்­திய அர­சாங்­கத்­துக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள் பின்­ன­ணி­யி­லேயே பேரா­சி­ரியர் பீரிஸின் இந்­திய விஜயம் அமைந்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.
இதே­வேளை ஜன­வரி மாதத்தில் இந்­திய இலங்கை மீன­வர்கள் சந்­தித்துப் பேச்சு நடத்­து­வ­தற்கும் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
 
இந்­நி­லையில் வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜ­யத்­தின்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான மீனவர் விவ­காரம் முக்­கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
இதே­வேளை எதிர்­வரும் மார்ச் மாதம் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பிரே­ரணை கொண்டு வரப்­பட்டால் இந்­தியா எவ்­வா­றான முடிவை எடுக்கும் என்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டல்கள் ஆரம்­பித்­துள்­ளன.
 
அந்­த­வ­கையில் மார்ச் மாதம் ஜெனி­வாவில் இலங்கை தொடர்பில் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படின் இந்­தியா எவ்­வா­றான முடிவை எடுக்கும் என்­பது தொடர்­பிலும் வெளி­வி­வ­கார அமைச்­சரின் இந்­திய விஜ­யத்­தின்­போது பேசப்­படும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
 
கடந்த 2012 மற்றும் 2013 ஆண்­டு­களில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்பில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­க­ளுக்கு இந்­தியா ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

சிதம்பரம், வாசன் திடீர் ராஜினாமா மிரட்டல்!!

Wednesday, January 01, 2014
சென்னை::மத்திய அமைச்சர்கள் சிதம்பரமும், வாசனும் விடுத்த திடீர் ராஜினாமா மிரட்டல், காங்கிரஸ் தலைமை வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது மிரட்டலை சமாளிக்க, தங்கபாலு கோஷ்டியினர் மீது கை வைத்துள்ளது. தங்கபாலு ஆட்கள் நீக்கப்பட்டு, நான்கு மாவட்டங்களில், சிதம்பரம் ஆதரவாளர்கள், தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோஷ்டி விகிதாச்சாரம்:

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, 12 ஆண்டுகளுக்கு பின், புதிய நிர்வாகிகள், கடந்த மாதம், 17ம் தேதி நியமிக்கப்பட்டனர். அதில், 'கோஷ்டிகளின் விகிதாச்சாரப்படி, நியமனம் செய்யப்படவில்லை; வாசன் தரப்புக்கு, 50 சதவீத இடங்கள் தரப்பட்டுள்ளன. இது, கட்சி விரோதம்' என, மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆதரவு அணியினர், எதிர்ப்புக் கொடி பிடித்தனர். அதிலும், சிதம்பரம் மகன் கார்த்திக்கு, மாநில துணை தலைவர் பதவி தரப்படாத விவகாரம், அந்த அணியினர் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு, 'மத்திய அமைச்சர் வாசனும், அவரது ஆதரவு, மாநில தலைவரான ஞானதேசிகனுமே காரணம்' என, அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் மேலிடத்திற்கு, சிதம்பரம் திடீர் மிரட்டல் விடுத்த தகவல், இப்போது வெளியாகி உள்ளது.

மரியாதை கிடையாதா?

இதுகுறித்து, சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர், அகமது படேலை, சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது, 'என் ஆதரவாளர்களை புறக்கணித்து, எனக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டனர். என் ஆதரவாளர்கள், ஐந்து பேருக்கு உடனடியாக, மாவட்ட தலைவர் பதவி தர வேண்டும்; மாநில நிர்வாகிகள் பதவியிலும், என் ஆதரவு காங்கிரசார், ஐந்து பேரை நியமிக்க வேண்டும். இல்லையேல், நான் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை' என, மிரட்டல் விடுத்தார். இதனால், காங்கிரஸ் மேலிடம் ஆடிப் போய் விட்டது. இவ்வாறு, சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சிதம்பரம் மிரட்டலை சமாளிக்க, காங்கிரஸ் மேலிடத் தலைவர், அகமது படேல், வாசனிடம் பேசியுள்ளார். அப்போது, சிதம்பரம் அணிக்கு, சில பதவிகளை விட்டுத் தரும்படி, வாசனிடம் கேட்டுள்ளார். ஆனால், அதை ஏற்க வாசன் திட்டவட்டமாக மறுத்து விட்டதோடு, 'என் ஆதரவாளர்கள் மீது கை வைத்தால், நானும் பதவி விலகி விடுவேன்' என, பதில் மிரட்டல் விடுத்துள்ளார்.

போட்டி போட்டு மிரட்டல்:

இருவரும் போட்டி போட்டு, மிரட்டுவதால், அதிர்ந்து போன காங்கிரஸ் மேலிடம், தங்கபாலு அணி மீது கை வைத்துள்ளது. தங்கபாலு ஆதரவு மாவட்ட தலைவர்களிடம் இருந்து பதவியை பறித்து, சிதம்பரம் அணிக்கு கொடுத்துளளது. இதனால், தற்போது, கொந்தளித்துள்ள தங்கபாலு கோஷ்டியினர், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து, அந்த அணியினர் கூறியதாவது: கட்சி பதவிகளில், வாசன் அணிக்கே, அதிக பங்கு கிடைத்துள்ளது. எனவே, அவர்களிடம் இருந்து எடுத்து, சிதம்பரத்துக்கு கொடுத்திருந்தால், அது நியாயம். சிதம்பரம், வாசனை மட்டுமே நம்பி, காங்கிரஸ் இல்லை; அதை, மேலிடம் உணர வேண்டும். காங்கிரசுக்கு சோதனை வந்தபோது, கூடவே இருந்தவர், தங்கபாலு. சிதம்பரமும், வாசனும் விலகிச் சென்றவர்கள்; அவர்களுக்கு, மேலிடம் துணை போவது சரியல்ல. இவ்வாறு, தங்கபாலு கோஷ்டியினர் கூறினர்.