Wednesday, January 1, 2014

யார் இந்த புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன்!

Wednesday, January 01, 2014
இலங்கை::கடந்த திங்களன்று (29-12-2013) காலை 9:30 மணியளவில், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் சந்தித்து கலந்துரையாடினார்.
 
இதன்போது, எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அதோடு பல அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
 
இச் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டார். கலந்துரையாடலின் பின்னர், மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் சந்தித்தனர்.
 
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா  டில்கோ விடுதியில்.

யார் இந்த புலிகளின் ஆதரவு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன்!

http://wce-tgte.org/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

http://wce-tgte.com/2013-05-18-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

2013-05-18 தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன்-ராதிகா.எம்.பி !

அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்!

Wednesday, January 01, 2014
இலங்கை::இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் 2013 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
யுத்தத்தால் அகதியானவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 43,000 இந்திய வீட்டுத்திட்டத்தில் 10,184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
 
அதில் யாழ். மாவட்டத்தில் 1832 வீடுகளும் 3090 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் 3540 வீடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 1074 வீடுகள் மன்னார் மாவட்டத்திலும் 648 வீடுகள் வவுனியா மாவட்டத்திலும் 66 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்டி முடிக்கப் பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
100 வீடுகள் நவீனமயப்படுத் தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வீட்டிற்கும் 2,50,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7.8 மில்லியன் ரூபா பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
 
இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டப் பணிகள் 2012 ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2014 ஆம் ஆண்டில் 16,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டில் 17,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளதகாவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கான முழுமையான இயலுமை இலங்கையிடம் உள்ளது: ஜீ எல் பீரிஸ்!

Wednesday, January 01, 2014
இலங்கை::தனது நாட்டு மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பணிகளை பொறுப்பேற்கவும் இலங்கை முழுமையான இயலுமையுடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் எமது பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் எல்லோருக்கும் அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிசெய்வதற்கான வளங்களும் நிறுவனங்களும் அதற்கான மனோதிடமும் எங்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரென்ஸா லெடினா செய்திஸ்தாபனத்துக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்ததிலிருந்து நான்கு வருட குறுகிய காலப்பகுதிக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எமது நாட்டில் நீங்கள் எங்கு சென்றாலும் முன்னேற்றத்தின் அடையாளங்களை காணமுடியூம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 30 வருட போரினால் ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சுமார் 300 பணிகளில் முன்னுரிமைப்படுத்தல்களை செய்யவேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வடபகுதியில் முழுமையாக கன்னி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 11000 க்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சம உரிமைகளுடன் சமூகத்தில் மீள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதுவருட வாழ்த்துச் செய்தி!

Wednesday, January 01, 2014
இலங்கை::மலரும் புத்தாண்டு அபிவிருத்தி தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கு வழிவகுக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது 2014 புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவி த்துள்ளார்.

இப்புத்தாண்டு பொருளாதாரம் மற்றும் அரசியல் துறைகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆண்டாகும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அபிவிருத்திக்கான ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் பெருமையுடன் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடு கிறோம். மிகுந்த அர்ப்பணத்துடன் நாம் அபிவிருத்தி தசாப்தத்தில் காலடியெடுத்து வைத்துள்ளோம்.
 
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக பாதைகள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அலங்காரம் போன்றவற்றின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்து வருகின்ஹர்கள்.
 
பிறந்திருக்கும் புத்தாண்டு அபிவிருத்தித் தசாப்தத்தில் மேலும் பல கருத்திட்டங்களுக்கான வாயில்களைத் திறக்கின்றது. இதன்மூலம், நீங்களும் உங்களது பிள்ளைகளும் எதிர்காலத்தில் இன்னும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தொடர்ந்தும் எம்மீது நம்பிக்கை வைப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
 
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு பொருளாதார அபிவிருத்தியிலும் அரசியல் துறையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு ஆண்டாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், மனநிறைவு ஆகியவற்றைப் பேணிய நிலையிலேயே நாம் இத்திசையில் முன்னோக்கிச் செல்கிறோம். எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உண்மையான தேசியமுன்னேற்றத்திற்கும் இதுவே சரியான பாதை என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
 
தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் எல்லா வகையான வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் ஒதுக்கிவிட வேண்டும். இதன் விளைவாகவே ஒரு புதிய அரசியல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரம் ஏற்படும். இதனை மேலும் உறுதிப்படுத்திய நிலையிலேயே நாம் இப்புத்தாண்டில் முன்னேறிச் செல்ல வேண்டும். எமது மக்களுக்கு சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பெற்றுக் கொடுத்த நாம் அவர்களுக்கு அபிவிருத்தியையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொடுக்க அர்ப்பணத்துடன் உள்ளோம்.
 
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தேசத்தின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளுக்கு வெற்றியைத் தரவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

we wish all of you a very happy new year:!!!


Wednesday, January 01, 2014
சென்னை::
 

முதல்வர் ஜெயலலிதாவின் புத்தாண்டு வாழ்த்து!

Wednesday,January,1st, 2014
சென்னை::வலிமையும், வளமும் மிக்க தமிழகத்தை படைத்திட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்றும், இந்த புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் மக்களுக்கு வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:- 
புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும்  கொண்டாடும் இந்த இனிய நாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத்   தெரிவித்துக் கொள்வதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்திலுள்ள அனைத்து மக்களும் அமைதியான சூழலில் வளமான வாழ்வு பெற்று முன்னேற்றம் காணவும், இங்கு வறுமையில்  வாடி நிற்போர் எவருமில்லை என்ற நிலை எய்தி, சமூகப் பொருளாதார நிலையில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கிட வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றிடவும்  எனது தலைமையிலான அரசு அயராது பாடுபட்டு வருகிறது. 
மக்களின் நல்வாழ்விற்காக எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற  நலத்திட்டங்களை அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும், வளமும் மிக்க  தமிழகத்தைப்   படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும்  இந்தப் புத்தாண்டு புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி,  அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு  முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ரூ.281 கோடிக்கு பொங்கல் பரிசு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இதன் மூலம் அரசுக்கு 281 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:_
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும் அளவுக்கு கொண்டாடப்படும் திருநாள் பொங்கல் திருநாள். 
விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்  தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதால், இந்த நாள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், விவசாயிகள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.  
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், வறட்சி நிலைமை, பயிர்கள் பாதிப்படைந்தது ஆகியவற்றைக்  கருத்தில் கொண்டும்;  கடந்த ஆண்டு  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்புடைய 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. 
இதே போன்று, வரும் 2014_ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசுத்  தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதன் மூலம் அரசுக்கு 281 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
என்னுடைய இந்த நடவடிக்கை அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி சீரோடும்,  சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும். 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.