Tuesday, April 2, 2013

19 Former LTTE Combatants Given Loans for Self-empl!

Tuesday, April 02, 2013
Colombo::A brief ceremony for award of interest-free loans to some 19 rehabilitated former combatants, enabling them to commence their own self-employment projects, took place on Saturday (30) at 62 Division Headquarters in Vavuniya.

Each rehabilitee under this loan scheme, initiated with sponsorship, provided by Mr Chutta Ratnasingham of Canada-based ‘Namasthe’ organization received an interest-free loan of Rs 50,000/= each during the occasion. Presidential Task Force, Colombo Rotary Club and Bank of Ceylon have coordinated the project that would help find self-employment for those former combatants.

Colombo Rotary Club officials, Major General Boniface Perera, Commander, Security Force Headquarters-Wanni (SFHQ-W), 62 Division General Officer Commanding, 622 Brigade Commander and a large gathering of officers were present during the brief ceremony.

Those 19 former combatants together with their family members attended the award ceremony.

ஆறாவது முறையாக நடைபெறவுள்ள இந்திய ப்ரிமியர் லீக்போட்டிகளில் 10 இலங்கை வீரர்கள்!

Tuesday, April 02, 2013
இலங்கை::ஆறாவது முறையாக நடைபெறவுள்ள இந்திய ப்ரிமியர் லீக்போட்டிகளில், சென்னையில் இடம் பெறும் போட்டிகளில் இலங்கை அணி பங்கு கொள்ளாததன் காரணமாக, கிரிக்கட்டில் ரசிகர்கள் காட்டி வரும் ஆர்வத்தில் குறைவு ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரும் இலங்கையின் ஆட்டக்காரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சென்னையில் இடம் பெறும் போட்டிகளில் இருந்து முக்கிய இலங்கை வீரர்கள் விலக்கப்பட்ட விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசியலுடன் விளையாட்டை இணைத்து செயற்படுவதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தில் விளையாடும் போதும் அது இந்தியாவில் விளையாடும் போட்டியாகவே கணிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு இலங்கை கிரிக்கட் வீரரும் சென்னையில் இடம் பெறும் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் உறுதியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கு கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இலங்கையில் மீன்டும் தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்காக சர்வதேச சமூகம் கண்கானிப்புடன் இருக்கவேண்டும்: இலங்கைக்கான கொரியத்தூதுவர் ஜொங்மூன் சொய்!

Tuesday, April 02, 2013
இலங்கை::இலங்கையில் மீன்டும் தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்காக சர்வதேச சமூகம் கண்கானிப்புடன் இருக்கவேண்டும் என இலங்கைக்கான கொரியத்தூதுவர் ஜொங்மூன் சொய் தெரிவித்தார்.

மாத்தறை, கும்புறுகமுவ எனும் இடத்தில் கொரிய இலங்கை நட்புறவு வைத்தியசாலைத்திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரிய அரசின் பகுதியளவு நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வைத்தியசாலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டபோதே கொரியத் தூதுவர் மேற்படி தெரிவித்தார்.

இலங்கை கடந்த காலங்களில் யுத்தத்தினால் மாத்திரமன்றி சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கும் முகம்கொடுத்து அவற்றிலிருந்து மீள்வதற்காக பெரிதும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது புது உத்வேகத்துடன் செயற்படும் இலங்கைக்கு சர்வதேச சமூகம் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்தும் அவரது உரையில் நாட்டில் யுத்தம் நிறைவடைந்தவுடன் புனர்வாழ்வு, புனரமைப்பு, அபிவிருத்தி, சமூகங்களிடையே நல்லிணக்கம், சமாதானம் போன்றவற்றுக்கே அரசு முக்கியத்துவம் வழங்கியதை நாம் காணக்கூடியதாவிருந்தது எனக் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் ஹூரியத் மாநாடு: மிதவாத தலைவர்கள் கைது!

Tuesday, April 02, 2013
ஸ்ரீநகர்::காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு மிதவாத தலைவர்கள் பலர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கத்தண்டனை கைதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பகுதியில் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் வடக்கு காஷ்மீரில் உள்ள அப்சல் குரு வீட்டிற்கு சென்று அவனுடைய உறவினர்களை சந்திக்க ஹூரியத் அமைப்பு தலைவர்கள் முடிவு செய்தனர். இதனையொட்டி ஹூரியத் அமைப்பு தலைவர் மீர்வெய்ஜ் உமர் பரூக் மற்றும் உறுப்பினர்கள் ஆகா சையத் ஹாசன் ஆல்சப்வி அல்மோஸ்வி, ஜாபர் அக்பர் பாத் மற்றும் ஷஹிதுல் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வடகாஷ்மீரில் உள்ள தோயப்ஹாவில் அப்சல் குருவின் வீடு உள்ளது. அங்கு சென்று அவரது குடும்பத்தினர்களை சந்திப்போம் என்று மீர்வெய்ஜ் அறிவித்திருந்தார்.
இதனையொட்டி ஹூரியத் மாநாடு மிதவாத தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

மற்றொரு ஹூரியத் அமைப்பு தலைவரும் காஷ்மீர் மக்கள் லீக் தலைவர் முஹ்தர் அஹமத் வாஜாவும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் அனந்த் மாவட்டத்தில் உள்ள சத்தெர் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்னர் காஷ்மீர் பிரிவினைவாதிகள் செயல்கள் தீவிரமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு!

Tuesday, April 02, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

(புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கட்சியை பதிவு செய்வது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

(புலி)கூட்டமைப்பு பிளவடைவதனைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளுமாறு சிரேஸ்ட உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தனிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Monday, April 1, 2013

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார்!

Monday, April 01, 2013
இலங்கை::எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது அவர், இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

இது தவிர, எதிர்கட்சித்தலைவர், இந்திய அரச மற்றும் எதிர்கட்சிகளின் உயர்மட்ட பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் இந்திய தமது வாக்கை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அளித்ததன் பின்னர் அங்கு விஜயம் செய்யும் முதலாவது அரசியல் பிரமுகர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.