ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் (Gilles de Kerchove) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கையில், கில் டி கெர்ச்சோவ் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை(12) முதல் ஜூலை 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது அரசாங்க உறுப்பினர்கள்,
எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment