அமித் ஷா, உள்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து, கட்சியின் புதிய தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டா, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன்ஒருபகுதியாக, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தேசிய அளவில் வரும் 6ம் தேதி துவங்குகிறது.தமிழக பா.ஜ.க,வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, சென்னையில் ஜே.பி. நட்டா துவக்கிவைக்கிறார். அதேபோல், பிரதமர் மோடி வாரணாசியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை, தெலுங்கானாவிலும் வரும் 6ம் தேதி துவக்குகின்றனர்.தமிழகத்தில் மொத்தம்
67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து, சமூக, அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒருவரை மண்டலத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் தமிழ் ஊடகப் பத்திரிக்கையான IE தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment