பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாளை ஒரே நாளில் கேரளாவுக்கு வர உள்ளனர்.பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இரு தலைவர்களும் தென்மாநிலத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொச்சி வந்து சேருகிறார். நாளை இரவு அவர் கொச்சியில் தங்குகிறார்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அவர் குருவாயூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு கிருஷ்ணர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்கிறார். குருவாயூரில் கட்டப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் நாளை காலை கேரளா மாநிலம் வருகிறார். நாளை காலை கோழிக்கோடு வரும் அவர் 2 நாட்கள் வயநாடு தொகுதியில் தங்கியிருந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.அமேதி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ராகுல் வயநாடு தொகுதியில் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி மக்கள் மீது அவருக்கு பாசம் அதிகரித்துள்ளது.
அந்த பாசத்தையும், நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தி ராகுல் நன்றி தெரிவிக்க உள்ளார். இரண்டு நாட்களில் மொத்தம் 6 ரோடு ஷோவை ராகுல் நடத்த உள்ளார்.
இந்த ரோடு ஷோ மூலம் காங்கிரசார் மட்டுமின்றி ராகுல்காந்தியும் புத்துணர்ச்சி பெறுவார் என்று கேரளா மாநில காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment