Sunday, June 2, 2019

முஸ்லிம் பள்ளிவாசலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொறுப்புச் சொல்ல வேண்டும்: பொதுபல சேனா!

நபிகள் நாயகமே அனுமதிக்காத “டிரார்” என்ற முஸ்லிம் பள்ளிவாசலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
 
தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதமிருக்கும் அத்துரலிய ரத்ன தேரரை சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,அனுராதபுர மடாடுகவில் ஒரு பள்ளிவாசலை அப்பிரதேச மக்கள் உடைத்துள்ளனர்.
இந்த பள்ளிவாசல்கள் தான் “டிரார்” பள்ளிவாசல் என அழைக்கப்படுகின்றது. இவ்வகையான டிரார் பள்ளிவாயல்களை உடைத்து தகர்த்துவிட்டு அவ்விடத்தில் குப்பைகளைப் போடுமாறு நபியர்கள் கூறியுள்ளார் என ஞானசாரர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment