Tuesday, May 7, 2019

நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டு தேவையற்ற வெசாக் பண்டிகை நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டாம்!

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு, வெசாக் தினத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையிலான நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என பௌத்த மதத்தின் நான்கு பீடங்களைச் சேர்ந்த மஹாநாயக்கர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
நான்கு பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக இது தொடர்பாக அறிக்கை
ஒன்றை விடுத்துள்ளனர். மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட சிறி ஞான ரத்தன தேரர் மெரபுர பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாசி ராமாஞ்ஞ மகாநாயக்கர் சங்கைக்குரிய நாபானபேமசிறி தேரர் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் விகாரைகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வெசாக் பண்டிகையை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தோரணங்களை அமைக்கும் போது பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் மஹா நாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment