Sunday, May 5, 2019

சர்ச்சையில் சிக்கியது சவூதி – கொழும்புக்கு அனுப்பிய இரகசிய தகவல் கசிந்தது!

அந்த செய்தியின் இணைப்பு
இலங்கையில் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் நடக்க ஐந்து தினங்கள் இருக்கையில் ஏப்ரல் 16 ஆம் திகதி சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பின் -அப்துல் அஸீஸ் , இலங்கையின் சவூதி தூதரகத்திற்கு அனுப்பிய இரகசிய ஆவணமொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது alahednews செய்தி நிறுவனம் .
உடனடியாக ,
...
1- அனைத்து ஆவணங்கள் , கணனி தரவுகள் , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களுடன் செய்த தொடர்பாடல்கள் அழிக்கப்பட வேண்டும் .
2- குறிப்பாக வரும் மூன்று நாட்களுக்கு கூட்டம் மிகுந்த இடங்களில் முக்கியமாக தேவாலய பகுதிகளுக்கு செல்லாதிருக்க தூதரகத்தின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தல் ,
3- இலங்கை தரப்புக்கள் மற்றும் அவர்களின் கண்ணோட்டம் குறித்து செய்திகளை எழுத்து மூலம் சொல்லவேண்டும் .
 
என்ற இந்த மூன்று விடயங்களை குறிப்பிட்டு சவூதி வெளிவிவகார அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது அந்த செய்தி நிறுவனம்.சர்ச்சைக்குரிய இந்த தகவல்கள் முன்கூட்டியே பரிமாறப்பட்டதால் இலங்கை தாக்குதல்களை சவூதி முன்னதாக அறிந்து வைத்திருந்ததா என்ற சந்தேகம் இராஜதந்திர மட்டங்களில் ஏற்பட்டுள்ளது.இலங்கை இதனை கவனத்திற் கொண்டுள்ளதாகவும் அறியமுடிந்தது.
அந்த செய்தியின் இணைப்பு

No comments:

Post a Comment