Wednesday, May 8, 2019

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல்: பல ஆண்டு 'பங்காளி சண்டை??

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மீண்டும் மோதல் ஆரம்பித்து விட்டது. பல உயிர்களை காவு வாங்கியும் நீண்ட காலமாக தொடரும் 'பங்காளி சண்டைக்கு' காரணம்தான் என்ன?மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஒன்றுபட்ட பிரதேசமாக இருந்த காலத்தில் இப்பகுதி மீது ஏராளமான படையெடுப்புகள் நிகழ்ந்தன. ரோமானிய படையெடுப்பிற்கு பின் யூதர்கள் ஒடுக்கப்பட்டனர். அதனால் கி.பி.135ல் ரோமானிய பேரரசர் ஹேட்ரியனை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர் யூதர்கள். அக்கிளர்ச்சியை முறியடித்த பேரரசர் ஹேட்ரியன்சிரியாவையும் ஜுடேயியாவையும் ஒருங்கிணைத்து சிரியாபாலஸ்தீன மாகாணங்களை நிறுவினார்.இப்போரில் யூதர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

ஏராளமானோர் வெளியேற்றப்பட்டனர். அடிமைகளாக விற்கப்பட்டனர். அதன்பின் 1516ல் பாலஸ்தீனத்தை அரேபியர்கள் கைப்பற்றினர். அன்றில் இருந்து முதலாம் உலகப்போர் வரை இப்பகுதி அரேபியர்களின் வசமே இருந்தது.தனிநாடு கோரிக்கைஆட்சியாளர்களால் உரிமைகள் பறிபோவதுடன் தங்கள் இனம் அனுபவிக்கும் கொடுமைகளை கண்டு பொங்கி எழுந்த யூத அமைப்புகள் சொந்தமாக ஒரு நாட்டை நிறுவ எண்ணினர். பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலேம் தங்களுக்கு சொந்தமானது என யூத அமைப்புகள் தனிநாடு போராட்டத்தில் ஈடுபட்டன.

அக்காலகட்டத்தில் ஆட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது பாலஸ்தீனம். முதலாம் உலகப்போரில் ஆட்டோமான் பேரரசு தோல்வி அடைந்ததை தொடர்ந்து பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு பிரிட்டனுக்குக் கிடைத்தது. பிரிட்டனிடம் யூத அமைப்புகள் தனி நாடு கோரிக்கையை வைத்தன.நீறு பூத்த நெருப்பு இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மன் நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையில் பல லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு யூத நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என முழக்கங்கள் வலுத்தன.

இதையடுத்து ஐ.நா. ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியது. அதன்படி 1947 நவ.29ல் பாலத்தீனத்தைப் பிரித்து அரபு மற்றும் யூத நாடு என உருவாக்க நினைத்தனர். இதை அரேபியர்கள் ஏற்கவில்லை. ஆனாலும் பிரிட்டிஷ் அரசு 1948 மே 14ல் பாலஸ்தீனத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பிரித்து இஸ்ரேல் என்ற நாட்டை அறிவித்தது.இதை எதிர்த்து எகிப்து, ஜோர்டான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீன் - இஸ்ரேல் போர் உருவாக பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு இதுவே!இந்த மோதலுக்குப் பின் பாலஸ்தீனத்தில் அரபு நாடுகளின் நிலப்பரப்பு பாதியாகக் குறைக்கப்பட்டது.   இதையடுத்து யூதப் படை7.5 லட்சம் பாலஸ்தீனியர்களை நாட்டில் இருந்து வெளியேற்றியது. ஜெருசலேத்துக்கு போட்டி இஸ்ரேல் - பாலஸ்தீனம் என பிரிந்தாலும் தலைநகர் ஜெருசலேமை
 
இருநாடுகளும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. அதை யூதர்கள்இஸ்லாமியர்கிறிஸ்துவர்கள் புனித நகராக கருதுகின்றனர். 'நபிகள் நாயகத்தின் வாழ்க்கையுடன் இணைந்த நகரம்' என்கின்றனர் இஸ்லாமியர்கள்.'இயேசு இறுதி காலத்தில் வாழ்ந்த இடம்' என்கின்றனர் கிறிஸ்தவர்கள்.'பைபிளின் பழைய ஏற்பாட்டின்படி கி.மு.1000 ஆண்டில் ஜெருசலேம் நகரை மன்னர் தாவீது இஸ்ரேல் நிறுவினார்.
அவரது மகன் சாலமன் அங்கு புகழ்வாய்ந்த ஆலயத்தை கட்டினர்' என்கின்றனர் யூதர்கள்.இதனால் அந்நகரை விட்டுக் கொடுக்க இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் மறுக்கின்றனர். இதனிடையே கிழக்கு ஜெருசலேத்தை 1967 ல் இஸ்ரேல் கைப்பற்றியது. இதனால் ஜெருசலேகத்தை தனது தலைநகராகக் அறிவித்தது. அதை ஏற்காத பாலஸ்தீனம் தங்கள் தலைநகராக விரும்புகிறது. இன்று வரை நீடிக்கும் பகைக்கு இதுவே காரணம். உடன்படிக்கை இரு நாடுகள் மோதலில் இஸ்ரேலில் இருந்த பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம் பெயர்ந்தனர்.

இதனால் ஹமாஸ் எனப்படும் பாலஸ்தீன தேசியவாத இயக்கங்கள் இருநாடுகளின் எல்லையான காசாவிலும்மேற்குக்கரையிலும் ஒன்று சேர்ந்தன. இவை பாலஸ்தீன விடுதலை அமைப்பை (பி.எல்.ஓ.,) உருவாக்கிஎகிப்து மற்றும் ஜோர்டான் உதவியுடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த துவங்கின. பதிலுக்கு இஸ்ரேலும் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது. இப்போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் 1993ல் பாலத்தீன விடுதலை அமைப்பும்இஸ்ரேலும் 'ஆஸ்லோ' சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதேநேரம் இந்த ஒப்பந்ததை இருநாடுகளும் கடைப்பிடிக்கவில்லை. அடையாளத்திற்காக போர்இஸ்ரேலில் இருந்து புலம் பெயர்ந்த 10.6 மில்லியன் பாலஸ்தீன அகதிகள் இந்த ஒப்பந்தத்திற்கு பின் நாடு திரும்ப விரும்பினர். ஆனால் 'அவ்வளவு பேரையும் அனுமதித்தால் யூத நாடு என்ற அடையாளத்தை இழந்து விடுவோம்' என இஸ்ரேல் நினைக்கிறது.யூதர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா 2017 ல் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.

இதை ஐ.நா.ஏற்றுக் கொள்ளவில்லை; இதனால் ஜெருசலேத்திற்கான மோதலின் வீரியம் குறையவில்லை.சில நாட்களாக இஸ்ரேல் ராணுவத்திற்கும்ஹமாஸ் அமைப்பினருக்கும் கடும் சண்டை நடக்கிறது. கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 24 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாலஸ்தீனம்'கடந்த வாரத்தில் மட்டும் காசா பகுதியில் 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது' என குற்றம் சாட்டியுள்ளது.ஆனால் இஸ்ரேல்'காசா பகுதியில் இருந்து 450-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் எங்கள் நாட்டுக்குள் ஏவப்பட்டன.

அதன் பிறகே எதிர்த்தாக்குதலைத் தொடங்கினோம்' என்கிறது.'சைபர்' தாக்குதல் இணையதளங்கள் தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கும் 'சைபர்' தாக்குதல் பல நாடுகள் மீது நடத்தப்படுகிறது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் 'சைபர்' தாக்குதலுக்கு இதுவரை எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.இந்நிலையில் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் நடத்திய 'சைபர்' தாக்குதலுக்கு பதிலடியாக வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். இதுவரை எந்த நாட்டினரும் கடைப்பிடிக்காத ஒன்று இது.இஸ்ரேல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்'ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய சைபர் தாக்குதலை முறியடித்துள்ளோம்.

சைபர் தாக்குதல் நடத்தும் காசா பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டடத்தைத் தாக்கியுள்ளோம். தற்போது HamasCyberHQ.exe என்ற இணையதளம் நீக்கப்பட்டு விட்டது' என தெரிவித்துள்ளது.இந்நிலையில்ஹமாஸ் இயக்கத்தினர் மீண்டும் 'சைபர்' தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலை மறுத்த இஸ்ரேல் ராணுவம்'மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தும் திறமை ஹமாஸ் இயக்கத்திற்கு இல்லை' என கூறியுள்ளது.ரம்ஜான் நோன்புக்காக இஸ்ரேல்ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர்நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் குறைந்தாலும் அமைதியின்மை தொடர்கதையாகவே இருக்கும்!

No comments:

Post a Comment