Wednesday, May 1, 2019

தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு வெடிப்பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்திய டொல்பின் ரக வேன் கைப்பற்றல். ஒருவர் கைது!

கல்முனை - சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு வெடிப்பொருட்களையும்
மனிதர்களையும் கொண்டு செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வேனொன்று நேற்று பகல் கெக்கிராவ- மரதங்கடவல பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மரதங்கடவல – மேல் புளியங்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த வேன் 250- 5680 என்ற இலக்கத்தையுடைய டொல்பின் ரக வேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த வேனின் சாரதியான 46 வயதுடைய அபுசாலி நசார் என்ற நபரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.தான் கெக்கிராவை இல் இருந்து சாய்ந்தமருதுக்கு வாடகை அடிப்படையிலேயே ஆட்களை கொண்டு சென்றேன் என சாரதி வாக்குமூலம் வழங்கி உள்ளார்.

தற்கொலை குண்டு தாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காக பயன்படுத்திய வான் சாரதி மற்றும் வானை வடைக்கு கொடுத்த 3 பேர்  மட்டு. மாவட்ட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த வானையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்ப...திகாரி எம்.எம்.டி. கீத்த வத்துர தெரிவித்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரவு தற்கொலை குண்டுதாரிகள் ஆடைவாங்க பயன்படுத்திய வானை கல்லடி பிரதேசத்தில் வைத்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து வானை ஓட்டிச் சென்ற பத்திரிகைகளை விநியோகிக்கும் ஏஜன்சியில் சாரதியாக கடமையாற்றிய காத்தான்குடி 4 ம் பிரிவு 3 ம் பழைய வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹமட் றிபாஸ் என்பவரை காத்தான்குடியில் வைத்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேரை கைது செய்தனர்

No comments:

Post a Comment