பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி விடுத்த கோாிக்கையை ஜனாதிபதி நிராகாித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ராஜித சேனாரத்ன மற்றும் கபீர் ஹாஷீம் ஆகியோர் கடந்த 30ம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இக்கோாிக்கையை விடுத்ததாக தொிவிக்கப்படுகிறது.
இருப்பினும் சரத் பொன்சேகாவுக்கு எக்காரணத்தைக் கொண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாமைக்கான காரணத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment