பயங்கரவாத புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் துணை புரிந்ததாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளதை முன்னிட்டு, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று ஆற்றிய விசேட உரையின் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை கூறினார்
நடந்து முடிந்த போரில் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் என 25 ஆயிரத்து 367 படையினர் கொல்லப்பட்டனர் என கூறினார்.நூற்றுக்கணக்கான சாதாரண பொலிஸ் அதிகாரிகள், சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கிலும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த போர் காரணமாக உயிரிழந்தனர் என தெரிவித்தார்.
அமெரிக்காவின் FBI அமைப்பு உலகில் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பாக புலிகள் அமைப்பை 2008 ஆம் ஆண்டு ஜனவரி அன்று அறிவித்தது. அந்த பயங்கரவாதம், 2009
ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உறுதியானது என்று கூறினார்.அண்மைய கால வரலாற்றில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.யுத்தத்தின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவியதுடன் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத அமைப்பு என 2006 ல் பெயரிட்டது என்றும் தெரிவித்தார்.
ஆம் ஆண்டு மே மாதம் 19 திகதி முற்பகல் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உறுதியானது என்று கூறினார்.அண்மைய கால வரலாற்றில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.யுத்தத்தின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவியதுடன் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத அமைப்பு என 2006 ல் பெயரிட்டது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு அமெரிக்காவால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 2007 ல் புலிகளின் ஆயுதங்கள் கடத்தப்படும் கப்பல்களை அழிக்க முடிந்தது என்றும் இதன் பின்னர் பெப்ரவரி 2009 இல் அமெரிக்காவில் அரசாங்கம் மாறியதால் அதன் பின்னரான அணுகுமுறை மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறினார்.
தனது அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது போரை முடிவுக்கு கொண்டு வந்தது என தெரிவித்த அவர் இதுதொடர்பாக தெரிவிக்காமல் போரை முடித்தமையே சிலருக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் கூறினார்.குறிப்பாக சீனா இலங்கைக்கு உதவுவது வெளிநாட்டு சக்திகளுக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் போரை முடிவுக்கு வந்தாலும் தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், உலக வல்லரவுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய செயற்படும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம் தமது வெளிநாட்டு எஜமானர்களுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் யோசனை ஒன்றை நிறைவேற்றியது.இலங்கையில் நடந்த போர் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள் பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த இணங்கியது என்றும் தெரிவித்தார்.
இந்த யோசனையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய இலங்கை அரசாங்கம் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது என்றும் இறுதியாக காணாமல் போனோர் சம்பந்தமான செயலகத்தை ஏற்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment