Monday, April 29, 2019

மத்தியகிழக்கு தீவிரவாதம்! இலங்கையில் பயங்கரம் தீவிரவாதம் - isis vs ltte sucide attack!!

ஜிகாத் அமைப்பு இலங்கையில் வளர்ச்சியடைந்த விதத்தினை கடந்த 21 ஆம் திகதிதான் உலகம் அறிந்துகொண்டது. இது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம் மத்திய கிழக்கின் இரத்த கரை படிந்த எல்லைகள் இந்த தீவை நோக்கி நகர்த்தமை தெரியவந்துள்ளது.
 
ஐக்கிய அமெரிக்காவின் அரச திணை;கள அதிகாரிகள் ‘இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எந்தவிதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.
சில தசாப்;தங்களுக்கு முன்பு இந்த நாட்டில் வியாபித்த பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான வருடமாக மாறியது.
அந்த வருடம் வன்முறை தாக்குதல்களும் ஜிஹாத் அமைப்பினரின் தாக்குதல்களுட் படிப்படியாக வளர்ந்து 2019 ஆம் மிகவும் பயங்கரமாக வெடித்தது.கடந்த 30 வருடங்களாக இலங்கையில்  புலிகளின் பய்ஙகரவாத செயல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.புலிகள் சீருடை அணிந்தவர்களாகவும், கடற்படை மற்றும் விமானப்படை போன்ற போன்ற படைகளை அமைத்து ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்த அதேநேரத்தில் அவர்கள் ஓரு அரசங்கமாகவும் மாறியிருந்தார்கள்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் அவருடைய சகோதரரரான கோட்டாபய ராஜபக்ஷவை செயலாளராக நியமித்ததன் பின்னர் புலிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் வழக்கத்தினையும் கைவிட்டார்.அதே நேரத்தில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை பூண்டோடு அழித்தது.இன்று அந்த பயங்கரவாத இயக்கம் மக்களின் நினைவில் நிழலாடுவதுடன் சில இணையதத்தளங்களில் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.
 
ஆனால் இன்று இலங்கையில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இலங்iகில் இஸ்லாமியர்களுடைய அச்சுறுத்தல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட காணொளியில் இலங்கை வைத்தியர்கள் ஈராக் ரக்கா, சிரியாவில் சிகிச்சையளிப்பதை எடுத்துணர்த்தியது.கடந்த 2016 ஆம் ஆண்டு நீதியமைச்சராக கடமையாற்றிய நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் போது ‘ இலங்கையில் நன்றாக கல்வி கற்ற 32 முஜ்லிம்கள் ஐ.எஸ.ஐஎஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் இணைந்து போராடுவதாக குறிப்பிட்டார்.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐ.எஸ.ஐஎஸ் பயங்கரவாத கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பயங்கரவாத கூடம் அநுராதபுரத்திலுள்ள பௌத்த விகாரைகளை குண்டு வைத்து தாக்க திட்டமிட்டமை கண்டறியப்பட்டது.இன்று இலங்கையிலுள்ள ஜிஹாத் அமைப்பினர் கிறிஸ்த்தவ மதங்கள் மற்றும் உல்லாச பயணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த முன்வந்துள்ளது.
 
கடந்த 21 ஆம் திகதி வன்முறைகளை நடத்தியதும் இந்த அமைப்பாகும்.30 நிமிட இடைவெளிக்குள் 8 தற்கொலை குண்டுதக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மற்றம் நட்சத்திர விடுதிகள் என்பன தாக்கியளிக்கப்பட்டன.இவ்வளவு தீவிரமான ஒரு திட்டத்தை தேசிய ரீதியில் நடத்தியமைக்கு தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பு உரிமை கோரியதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகையில், ஒரு சர்வதேச வலைபின்னல் இல்லாமல் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது.
 
அதேநேரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரும் இந்த தாக்குதலை கொண்டாடியும் உரிமைகோரியும் இருந்தனர் என்பதோடு, இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை ஸ்ரீ லங்கா ஜிஹாடி எ பெயரிட்டிருந்தனர்.இந்த தீவிரவாத அமைப்பு மத்திய கிழக்கில் தாக்கப்பட்டபொழுது சிரியாவிலிருந்த ஸ்ரீ லங்கா ஜிஹாடி அமைப்பினர் நாடு திரும்பினர்
.அது மாத்திரமன்று, சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போதை பொருள் வர்த்தகம் இலங்கையில் தீவிரவாதம் வளர்வதற்க காரணமாக அமைந்தன.கொழும்பின் தெற்கே இஸ்லாமியர்கள் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தின் ஒரு பாரிய போதை பொருள் விநியோகஸ்த்தரான தாவுத் இப்ராஹிம் கஸ்கர் போதை பொருள் விநியோகத்திற்கான ஒரு அமைப்பினை உருவாக்கினர்.அவர் பாரிய அளவிலான போதை பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் திரைசேரி திணைக்களம் இப்ராஹிம் தாவுத்தை பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று பிரகடனபடுத்தியது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை பொலிசாரின் வாக்குமூலத்திற்கு அமைய தாவுத்திற்கு சொந்தமானது என கருதப்படும் 736 கிலோ கிராம் போதை பொருளை கைப்பபற்றினர்.இந்த தாவுத் என்பவர் ஆரம்பத்தில் அப்கானிஸ்தானில் தலிபான்களின் உதவியோட அபின் வியாபாரத்தில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் ஐ.எஸ அமைப்பினர் பாகிஸ்தான் உளவு துறை ஊடாக அபினை நாடு கடத்த முயற்சித்தனர்.அத்துடன் பாகிஸ்தர்ன கராச்சியிலுள்ள தாவுத்தின் வீட்டினை பாகிஸ்தான் உளவு பிரிவின் பாதுகாத்து வருகின்றனர்.இந்த போதை பொருள் விநியோகம், இந்தேநேசியா சிங்கப்பூர், தாய்லாந்து வியட்நாம், பங்களாதேஷ், இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
 
இவ்வாறு நடைபெறும் போதை பொருள் விநியோகத்தின் கிடைக்கப்பெறும் இலாபத்தினை அல்கய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ், லக்சரி டீ தொயிபா, ஜமாத் ஆகிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பிரித்து வழங்கக்படப்டன.சட்டவிரோதமான அமைப்பு, போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவற்றினால் இலங்கையில் வன்செயல்கள் இடம்பெறலாம் என்று கருதப்படுகின்றது.
 
இந்த 3 விடயங்களை தடுத்தாலன்றி வேறொன்றும் செய்யமுடியாது. பயங்கரவாத விடுதலை புலிகளை முறியத்த பின்னர் புதிதாக முளைத்துள்ள மத்திய கிழக்கு நாட்டிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தiதூக்க தொடங்கியுள்ளது.இந்த பயங்கரவாத்தினை முறியடிக்க வே;ணடும் என சர்வதேசத்தினர் அரசாங்கத்தினை எச்சரிக்கின்றனர்.இது முஸ்லிம்களுக்கு எதிரான விளைவுகளை உருவாக்கும் என்பதோடு இதனை தடை செய்வது கடினமான விடயமாகும்.

No comments:

Post a Comment