இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவத்தை அடுத்து இந்தியர்கள் இலங்கை செல்லுவதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.கடந்த 21-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் தற்கொலை படையினர்வெடி குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்கள் சுமார் 253க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இச்சம்பவத்தில் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.தொடர்ந்து இலங்கை அரசு இது குறித்து விசாரணை நடத்திவந்தது.மேலும் நாட்டின் பல்வேறு பகுதிளில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது.
அமெரிக்கா எச்சரிக்கை:
இலங்ககையில் மேலும் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழக்கூடும் என தகவல்கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டிற்கு சுற்றுலாவாக சென்றுள்ள அமெரிக்கர்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியா அறிவுறுத்தல்
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்தியர்கள் அவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தைதவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு உதவி ஏதேனும் தேவைப்பட்டால் அங்கு உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment