Tuesday, April 30, 2019

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (29) பெற்றுக்கொண்டுள்ளார். 
 
கொழும்பில் பொலிஸார் மற்றும் முப்படையினரை மையப்படுத்தி தலைமையகம்!
 
மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுகள் கொழும்பை மையப்படுத்திய ஒட்டுமொத்த நடவடிக்கை தலைமையகத்தின் கீழே உடன் அமுலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment