Monday, April 29, 2019

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்று முதல் முகத்தை மூடுவது தடை!

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இன்று  முதல் அமுலுக்கு வரும் வகையில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது.ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
 
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாக உள்ள நபரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாயிருப்பது அவசியமாகும் என்பது இந்த உத்தரவின் மூலம் மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, எந்தவொரு சமூகப் பிரிவையும் அசௌகரியத்திற்குள்ளாக்காத வகையில் அமைதியும் நல்லிணக்கமுமிக்க சமூகமொன்றை உரு
வாக்குவதற்காக ஜனாதிபதி அவர்களினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment