Friday, January 18, 2019

லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடைய புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்  புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான நவநீதன் எனும் குறித்த நபர் தென் ஜேர்மனில் வைத்து அவருடைய வீட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஈ.பி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை மாகஸ் பிரனாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தார்.

இதற்கு முன்னர், நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தனது கடமைகளை அவர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, தற்போதைய அசாங்கம் வலுகட்டாயமாக பதவியில் இருப்பதற்கு ஆதரவளிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
கொழும்பு 07 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 09.00 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளார்.

அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அ
றிவித்திருந்ததையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
 

Tuesday, January 1, 2019