Wednesday, October 31, 2018

நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தமது கடமைககளை பொறுப்பேற்றார்

 நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

சுனாமி ஏற்பட்ட காலத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் சீர்படுத்த முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் சரியான திட்டமிடல் ஊடாக தான் நிதியமைச்சர் என்ற வகையில் செயற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று நிதியமைச்சு பல சவால்களை எதிர்கொள்ள இருப்பதாகவும், வரி செலுத்துவதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்றும், பொருளாதாரம் சம்பந்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Monday, October 29, 2018

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தமது கடமைகளை பொறுப்பேற்றார்



                                                      With photos

                                                    poonththalir.over-blog.com

poonththalir.over-blog.com

     
poonththalir.over-blog.com
                                 

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்த பதவி!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்  கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்த பதவி!
 
தான் அரசின் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்படவுள்ளதாக நாளிதழ்களில் வௌியாகியிருந்த செய்திகள் தொடர்பில் எமது செய்திப்பிரிவு அவரை தொடர்பு கொண்டு வினவிய போது அதனை நிராகரித்து அவர் இதனை தெரிவித்தார்.

Sunday, October 28, 2018

நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு!

நாடாளுமன்றில் தேவையான அளவிற்கு அதிகமான பெரும்பான்மை ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது கட்சியினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றவதற்கு முன்னாள் பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால்இ அவருக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மாத்தறையில் நேற்ற இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது, அதன் அரசியற் குழு உறுப்பினர் லால் காந்த இந்தக் இதனைத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான நெருக்கடி நிலைமை தீர்க்குமாறு ரணில் விக்கரமசிங்க கோரலாம்.

அல்லது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என லால் காந்த தெ
ரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க பிரேரணை நிறைவேற்றம்

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு புதிய பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற பிரேரணை ஒன்றினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நிறைவேற்றியுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள்  நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடி குறித்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளார்.
குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் இதன்போது முன்வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க அதனை ஆமோதித்ததுடன், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
 
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஈ.பி.டி.பி கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தமது ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

MR-NM

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு சீனா வாழ்த்து!

இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.

சீனத் தூதுவராலயம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Saturday, October 27, 2018

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதியமமைச்சர்கள் குழுவொன்று புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு : கோத்தாபய ராஜபக்‌ஷ!

අතිමහත් අභිමානයෙන් සහ හදපුරා සතුටින් යුතුව ශ්‍රී ලංකාවේ නව අගමැති මහින්ද රාජපක්ෂ මහතාට සුභ පතමි. දැන් අපි එක්ව ස්ථාවර සහ නවීන ශ්‍රී ලංකාවක් ගොඩනගමු
It is with the greatest pride and happiness that I congratulate the new Prime Minister of Sri Lanka Hon.Mahinda Rajapaksa. Now together, we can rebuild a stable and progressive new Sri Lanka
இலங்கையின் புதிய பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு எமது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.உறுதிமிக்க இலங்கையினை இன்றுமுதல் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்.
கோத்தாபய ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானார்!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று (26) இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்ெகாண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று மாலை அவர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது, அரசாங்கத்திலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகுவதெனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்துச் சபாநாயகரைச் சந்தித்த சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்தனர்.
 
இதனையடுத்தே நேற்று
மாலை புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
இந்தப் பதவியேற்பு வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அமைச்சர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சமல் ராஜபக்‌ஷ, அநுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, டிலான் பெரேரா முதலானோரும் கலந்துகொண்டனர்.
 
பதவியேற்பு வைபவத்தின்போது ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ, மதக் கடமைகளில் கலந்துகொண்டார். பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுக்கொண்டதையடுத்து கொழும்பு உட்பட நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.