இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு (11) இரவு இடம்பெற்றதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்திய பிரதமரின் வருகையின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வந்த நிலையிலேயே இந்திய பிரதமரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment