நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நுகேகொடையில் இன்று மாலை நடைபெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் கையில் பலா மற்றும் குரோட்டோன் இலைகளை ஏந்திவந்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தி வாழ்க்கை செலவை உயர்த்தியுள்ளதால் தற்போது விலங்குள் உண்ணும் இலைகளை சாப்பிடும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை சித்தரிக்கும் முகமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்த பலா மற்றும் குரோட்டன் இலைகளை ஏந்திவந்தனர்.
நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்
பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மேசடி என்பவற்றை பிரதானப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
இதில் கூட்டு எதிரணியின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, ஜி.எல். பீரிஸ், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண டலஸ் அழகப்பெரும ,உதயகம்மன்பில உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் அவருடைய மகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment