Saturday, December 3, 2016

வெடித்து சிதறிய ரஷ்ய விண்கலம்!

மாஸ்கோ: சர்வதேச விண்வெளி மையத்துக்கு, நேற்று ஏவப்பட்ட ரஷ்யாவின் ஆளில்லா சரக்கு விண்கலம் வெடித்துச் சிதறியது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில், சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இது பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கி.மீ., உயரத்தில் விண்வெளியின்
மேற்பரப்பில் அமைந்துள்ளது.
 
 இங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விண்வெளி வீரர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர். இதற்காக அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள்-, வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தற்போது அங்கு 6 வீரர்கள் தங்கியுள்ளனர்.இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானுார் ஏவுதளத்தில் இருந்து ரஷ்யாவுக்கு சொந்தமான விண்கலம் மூலம் அனுப்பப்படுகிறது.
 
இந்நிலையில் 2.4 டன் எடை கொண்ட உணவு, தண்ணீர், எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் 'MS-04' என்ற விண்கலம், சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு ஏவப்பட்டது. இந்த விண்கலம் புறப்பட்ட 6 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா' தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment