கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய
இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று
அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார்.
ஃபிடல்
காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார்.
அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப்
பதவியேற்றார்.
மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச
தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த
அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.
அவ்வப்போது
அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல்
வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்
கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.
கியூபா நாட்டின் அதிபராகவும், பிரதமராகவும் சுமார் அரை நூற்றாண்டுக்காலம்
பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2008-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக
தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு
எடுத்து வந்தார். அதன்பின்னர் மிக அபூர்வமாக பொது நிகழ்ச்சிகளில் அவர்
பங்கேற்று வந்தார்.
விதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.
இந்நிலையில், சிலநாட்களாக முதுமைசார்ந்த உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானதாக அவரது சகோதரரும் அந்நாட்டின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
கியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment