Thursday, September 17, 2015
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென கூறினார்.
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில்தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்தார்
No comments:
Post a Comment