Sunday, September 06, 2015
புதுடில்லி:பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும்
பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்த, ஆளில்லா சிறு விமானங்களை பயன்படுத்த
முயன்று வருவதாக, அதிர்ச்சித் தகவல்
வெளியாகி உள்ளது.
விசாரணையில்...புலனாய்வு
துறை வட்டாரங்கள் கூறியதாவது:இந்திய புலனாய்வு ஏஜன்சிகளிடம் சிக்கியுள்ள,
லஷ்கர் - இ - தொய்பா இயக்கத்தை சேர்ந்த, அபு ஜுண்டால், இந்தியன் முஜாகிதீன்
இயக்கத்தின் சையத் இஸ்மாயில் அபாக் லங்கா, ஆகியோரிடம் நடந்த விசாரணையில்,
பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள்
ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., பயிற்சி
அளிக்கிறது.
பாராசூட்களில் இறங்குவதற்கும்,
'பாராகிளைடர்' பயன்படுத்தவும், பயங்கரவாதிகளுக்கு, பயிற்சி தரப்படுகிறது.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து பாராகிளைடர் சாதனத்தை அனுப்பி, ஆயுதங்கள்
மற்றும் வெடிபொருட்களை, இந்திய பகுதியில் போட பயங்கரவாதிகள் திட்டமிட்டனர்.
இந்த ஆயுதங்களை பயன்படுத்தி, அரியானா மாநிலம், சிர்சாவில் உள்ள ஆன்மிக
அமைப்பான, தேரா சச்சா சவுதாவின் கட்டடம் மீது தாக்குதல் நடத்த
திட்டமிடப்பட்டது.
பழுது...அதிர்ஷ்டவசமாக, பாராகிளைடர் சாதனம் பழுதடைந்ததால், தேரா சச்சா சவுதா மீதான
தாக்குதல்
திட்டம் நிறைவேறாமல் போனது. இருப்பினும், பாக்., எல்லையிலிருந்து,
பயங்கரவாத அமைப்புகள், பாராகிளைடர், ஆளில்லா சிறு விமானங்களை பயன்
படுத்தி தாக்குதல் நடத்த, தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது.
இவ்வாறு புலனாய்வு துறை வட்டாரங்கள் கூறின.
No comments:
Post a Comment