Friday, September 18, 2015
ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதமளவில், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதித் தடை நீங்குமென கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கிஷ்டி பெர்னாண்டோ குறிப்பிடுகின்றார்.
சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் படகுகளை கண்காணிப்பதற்கான கட்டமைப்பு தற்போது முழுமையாக நிறுவப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பிரகாரம் சுமார் 1,200 மீன்பிடி படகுகளில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திணைக்களத்திலுள்ள கருவிகள் ஊடாக சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்த படகுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்றும் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment