Sunday, September 27, 2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துள்ளார்..
இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொது அமர்வுக்கு புறம்பாக நியூயோர்க்கில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பான் கீ மூன், மைத்திரிபாலவுடன் தொடர்புக்கொண்டு தேர்தல் குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தையும் குறிப்பி;டத்தக்கது.
மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு உலக நாடுகளிடம் பாப்பரசர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக செவிமடுத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் ஆரம்ப உரை பாப்பரசர் புனித பிரான்சிஸ் இனால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது மரண தண்டனையை ரத்துச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியாக, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்ததாக அவரது ஊடகப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து எதுவித பிரதிபலிப்பையும் காணமுடியவில்லை என்றும் அவரது ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment