Wednesday, September 23, 2015
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள,
பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும், அமெரிக்கா செல்லும்
போது, நியூயார்க் நகரில், ஒரே ஓட்டலில் தான் தங்க உள்ளனர். எனினும்,
இருவரும் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்படவில்லை.
'பேலஸ் ஓட்டல்' :
கடந்த
முறை, நியூயார்க் நகரில் உள்ள, 'பேலஸ் ஓட்டலில்' தான், பிரதமர் மோடியும்,
இந்திய குழுவினரும் தங்கினர். அதே ஓட்டலில் தான், அமெரிக்க அதிபர்
ஒபாமாவும், அவரின் குழுவினரும் தங்கியிருந்தனர்.ஆனால், இந்த முறை, பிரதமர்
மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் போன்றோர், நியூயார்க் நகரில்
உள்ள, 'வால்டோர்ப் அஸ்டோரியா ஓட்டலில்' தங்குகின்றனர். பல அடுக்கு மாடி
ஓட்டலான அதன் ஒரு பகுதியில், மோடியும், மற்றொரு பகுதியில், நவாஸ் ஷெரீபும்
தங்க உள்ளனர். வெளியே வரும் போது, இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு
இல்லை. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் நிலவும் பதற்றமான
சூழலில், இரு தலைவர்களும் சந்திப்பது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு
எதுவும் வெளியாகவில்லை.
சீன உளவு அமைப்பு:
மோடி
மற்றும் நவாஸ் ஷெரீப் தங்க உள்ள ஓட்டலை, சீன நிறுவனம் ஒன்று
வாங்கியுள்ளது. இதனால், சீன நிறுவனங்கள், ஒட்டு கேட்கும் பணியில் ஈடுபடலாம்
என, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயர் மட்டத்திலான
நிகழ்ச்சிகளின் போது, சீன உளவு அமைப்புகள் ஒட்டு கேட்கும் பணியில் ஈடுபடாது
எனவும் கூறப்படுகிறது.
மோடியின் 'டூர்'
செப்.,
23 - நியூயார்க் வந்தடைதல்
25 - ஐ.நா., பொதுச்சபையில் உரை
26, 27 - கலிபோர்னியாவில் சுற்றுப்பயணம்
28 - நாடு திரும்புதல்
நவாஸ் ஷெரீப் 'டூர்'
செப்.,
25 - நியூயார்க் வருகை
27 - உயர்மட்டக்குழுவுடன் சந்திப்பு
29 - நியூயார்க்கில் பல நிகழ்ச்சிகள்
30 - ஐ.நா., சபையில் உரை
மோடியின் 'டூர்'
செப்.,
23 - நியூயார்க் வந்தடைதல்
25 - ஐ.நா., பொதுச்சபையில் உரை
26, 27 - கலிபோர்னியாவில் சுற்றுப்பயணம்
28 - நாடு திரும்புதல்
நவாஸ் ஷெரீப் 'டூர்'
செப்.,
25 - நியூயார்க் வருகை
27 - உயர்மட்டக்குழுவுடன் சந்திப்பு
29 - நியூயார்க்கில் பல நிகழ்ச்சிகள்
30 - ஐ.நா., சபையில் உரை
No comments:
Post a Comment