Thursday, September 24, 2015

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக சீனாவும், ரஸ்யாவும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக சீனாவும், ரஸ்யாவும் குரல் கொடுக்கத் தீர்மானித்துள்ளன. அமெரிக்காவினால் முன்வைக்கப்பட உள்ள உத்தேச தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென
 
சீனாசுட்டிக்காட்டியுள்ளது.அமெரிக்காவின் இலங்கை குறித்த உத்தேச வரைவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா இந்த அறிவிப்வை விடுத்துள்ளது.

உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பிலான இரண்டாவது உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டிருந்தது.இதேவேளை, முதலாவது உத்தேச வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment