Monday, September 28, 2015
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான பிராந்திய
ஒத்துழைப்பு கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என ரஸ்ய ஜனாதிபதி
விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இதன்போது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஷாட்டுக்கு, புட்டின் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளும், சிரியாவின் எதிர்கட்சிகளும் ஜனாதிபதி அஷாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையில் புட்டின் இந்த ஆதவை தெரிவித்துள்ளார்.
நியுயோக்கில் ஐக்கிய நாடுகள் சபை பேரவைக் கூட்டம் நாளை முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில், உலக தலைவர்களின் ஒன்று கூடலின் போது சிரிய பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஜனாதிபதி புட்டின், அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவுடன் இன்று கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment