Tuesday, September 22, 2015

பொருளாதார வளர்ச்சி வீதத்தை 6% இருந்து 10% ஆக அதிகரிப்பதே இலங்கை அரசின் இலக்கு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 22, 2015
தற்போது 6% ஆகவுள்ள பொருளாதார வளர்ச்சி வீதத்கை 10%ஆக அதிகரிப்பது புதிய அரசின் பிதான இலக்குகளில் ஒன்றாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி செயலகத்தில்    இடம்பெற்ற உலக வங்கியின் தென்னாசியப் பிராந்தியத்தின் உதவி தலைவர் அன்னெட் டிக்சன் அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கியின் உதவி தொடர்பில் நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் புதிய அரசினது அபிவிருத்திப் பணிகளுக்கும் உலக வங்கி உதவ முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டள்ளது.
 
புதிய அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் பல மாற்றங்களை அமுல்படுத்துவதற்கு எதிர் பார்ப்பதாகவும் வருமையை ஒழித்து வருமான சமத்துவமின்மையை குறைக்கப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மேலும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
 
மேலும், நாட்டில் உள்நுழையும் போதைப் பொருள்களை தடுத்து நிறுத்துவதற்கான நவீன தொழிநுட்ப உபரணங்களை பெற்றுக் கொள்வதற்கு உதவி வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் உலக வங்கி உதவித் தலைவைரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது, புதிய அரசினது எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக உலக வங்கி உதவித் தலைவைர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஏற்படுத்திமைக்கு தனது வாழ்த்துக்களை வெளிப்படுத்திய அவர் அது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளுக்கு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.
 
அத்துடன் அரசினது அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்பட உலக வங்கி விருப்பம் கொண்டுள்ளதாகவும் திருமதி அன்னெட் டிக்சன் அவர்கள் தெரிவித்தார்.
 
உலக வங்கியின் ஆய்வுகளின் பிரகாரம் விவசாய பொருட்கள் தொடர்பான தயாரிப்பு மையமாக செயற்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாடு இலங்கையே எனக்குறிப்பிட்ட அவர் இலங்கையின் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கு உலக வங்கி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பிரான் குளோட்டஸ் உள்ளிட்ட முக்கிய குழுவொன்று கலந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment