Wednesday, August 19, 2015
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என ஜெர்மனிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாக ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாக ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிரான்க் வோல்டர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலும், பொதுத் தேர்தலும் அமைதியானதும் நீதியானதுமான முறையில் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார். சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்கள் ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment