Tuesday, August 4, 2015

புதிய தேசிய அடையாள அட்டைக்கான கட்டண அதிகரிப்பு நிறுத்தம்!

Tuesday, August 04, 2015
புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ஆட்பதிவு திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளதென திணைக்கள அலுவலளர்கள் தெரிவித்தனர்.
 
முதலில், புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 3 ரூபாவிலிருந்து 100 ரூபாய் வரை அதிகரிக்கவும் அடையாள அட்டையிலுள்ள தகவல்களை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 1,000ரூபாவாக  அதிகரிக்கவும்திணைக்களம் தீர்மானித்திருந்தது.
 
தொலைந்த அல்லது பழுதடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணத்தை 15ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படவிருந்தது.

தேர்தல் தருணத்தில் இவ்வாறாக கட்டணங்களை அதிகரிக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் உட்பட பல தரப்பினரிடமிருந்து ஆட்பதிவு திணைக்களத்துக்கு வேண்டுகோள் கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார கூறினார்.

No comments:

Post a Comment